கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி உட்பட்ட கரலிக்கண்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தும், சீரமைப்பு பணியை மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.