மின் கம்பம் சீரமைக்கப்பட்டது

Update: 2022-08-08 13:23 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்லம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்