திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் குறைந்த மின்அழுத்த மின்சாரம் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் பல இடங்களில் மின்சார கபிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ஆபத்தாக காட்சியளிக்கிறது. பலமான காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகள் உரசிக்கொண்டு தீப்பொறி ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின்வாரியம் ஆய்வு செய்து தீர்வு வழங்க வேண்டும்.