எரியாத தெரு விளக்குகள்

Update: 2022-08-07 13:10 GMT

திருச்சி மாவட்டம் தோளூர்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

 

மேலும் செய்திகள்