சென்னை விருகம்பாக்கம், ஆர்காட் ரோடு பூபதி தெருவின் நுழைவு வாயில் அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும் இந்த மின் இணைப்பு பெட்டியின் அடிப்பகுதி உடைந்தும் உள்ளதால், எந்த நேரத்திலும் இந்த மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?