கொல்லங்கோடு நகராட்சியில் கிரத்தூரில் வடக்கேவிறகு வெட்டுவிளை பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. காற்று வீசும் போது மின்கம்பிகள் மரக்கிளைகள் மீது உரசி தீ பற்றி எரிகிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும், அந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யவும், தெருவிளக்குகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வர்ஜின், கிராத்தூர்
-வர்ஜின், கிராத்தூர்