தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆழ்வார் தெரு பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்விளக்குகள் எரியவில்லை. அந்த பகுதியை கடந்து செல்லும் போது 5 இடங்களில் மின்விளக்குகள் உள்ளது. இதில் ஒன்று மட்டுமே எரிகிறது. தெருமுனையில் உள்ள கம்பத்தில் மின்விளக்கு பொருத்தும் கம்பி மட்டும் உள்ளது. இரவு நேரத்தில் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டால் இருள் சூழந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.