செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், ஹாஜியார் தெருவில் உள்ள பள்ளியின் பின்புறம் இருக்கும் மின்சார கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கையால் சாய்ந்த மின்கம்பம் சீரானது. உடனடியாக பிரச்சினையை சரி செய்த மின்வாரியத்துக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்