ஒளிராத தெருவிளக்குகள்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூர் உப்பிலிபாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் பாளையத்தில் தெரு விளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகள் கடந்த 2 வாரங்களுக்கு மேல் எரியாமல் உள்ளது.இதனால் பெண்கள்,குழந்தைகள் அச்சத்துடன் தெருவில் நடமாட வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட உப்பிலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத தெருவிளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மூர்த்தி, தண்ணீர்பந்தல்