எரியாத விளக்குகள்

Update: 2022-06-04 14:15 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம், கிழக்கு சிட்லப்பாக்கம் 2-வது பிரதான சாலை மேம்பாலத்தில் உள்ள பல உயர் மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் சாலையின் சந்திப்பு பகுதியில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே எரியாமல் இருக்கும் உயர் மின்விளக்குகள் மீண்டும் எரிவதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்