செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் போரமனூர் போர்டு ரெயில்வே கேட்-ல் இருந்து விவேகானந்தர் நகர் பகுதிக்கு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள உயர் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் நலனைக் கருதி உடனடியாக மின்வாரிம் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.