சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. குறைந்த அளவு மட்டுமே மின்அழுத்தம் உள்ளதாலும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகிறது. மேலும் தொடர் மின்தடையால் இப்பகுதி மக்களின் குடிசை தொழில், விவசாயம் போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே தொடர் மின்தடையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.