அந்தியூரில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு மின் கம்பத்தில் செடிகள் வளர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் சுற்றியுள்ளன. தற்போது அந்த பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. யாராவது கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை தெரியாமல் தொட்டுவிட்டால் அசம்பாவதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி-கொடிகளை அகற்றவேண்டும்.