சிவகங்கை மாவட்டம் 20-வது வார்டு பொற்கைபாண்டியன் நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இருள்சூழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.