மதுரை மாவட்டம் எம்.கே.புரம் பகுதியில் உள்ள உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் இரும்புத்தூண் பழுதடைந்து உள்ளது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் இரும்புத்தூண் காணப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் இந்த மின்கம்பத்தால் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதகால் பொதுமக்கள் அச்சஉணர்வுடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இதை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.