மின்கம்பிகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு

Update: 2022-08-04 11:58 GMT
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் தியாகராஜபுரம் ஊராட்சியில் தாழைக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இப்பகுதியில் உள்ள மரக்கிளைகள் மீது மின் கம்பிகள் உரசுவதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. லேசான காற்று அடித்தாலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்