நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அலவாய்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தம் குறித்து மின்வாரிய அலுவலர்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்.
-வேலு, வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.