ராமநாதபுரம் நகராட்சி பனைக்குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இந்த அலுவலக பகுதியில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.