நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலிருப்பு பகுதியில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வசதித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குறிப்பாக மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதிகளில் குடிசை வீடுகள் உள்ளன. இதனால் பலத்த காற்று வீசினால் மின்கம்பிகள் குடிசை மீது உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மரக்கிளைகளில் சிக்கிக்கொள்கின்றன. இதன் காரணமாக குடிசை வீடுகளில் உள்ளவர்கள் விபத்து ஏற்பட்டுவிடுமோ? எனஅச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?