ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2022-05-27 14:41 GMT
சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 2-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்தும் வயர்கள் வெளியே தெரிந்தபடியும் காட்சி தருகிறது. மேலும் ஆபத்தான இந்த மின் இணைப்பு பெட்டியால் இந்த சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாம். எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்