திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோடு மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் பாதி உடைந்த நிலையில் மோசமாக காட்சி தருவது தொடர்பாக தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக உடைந்த மின்கம்பம் மின்வாரிய அதிகாரிகளால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.