நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு 10-க்கும் அதிகமான மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அனைத்து மின் கம்பங்களும் சேதமடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எந்த நேரமும் கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆலத்தூர்