தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-08-02 13:23 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மின்கம்பிள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. தற்போது மழை பெய்து வருதால் அருகில் உள்ள மரக்கிளைகளில் மின்கசிவு ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கிடாமங்கலம்

மேலும் செய்திகள்