நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாமரைப்புலம் கிராமத்தில் உதவி தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் புதிதாக வைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளது. ஆனால் அந்த மின்மாற்றி தற்போது பழுதடைந்து விட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தாமரைப்புலம்