சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-02 13:04 GMT

அரியலூர் மாவட்டம், இந்திராநகர் கிழக்கு பகுதியில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் பழைய மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பத்தில் அமைந்துள்ள ஸ்டே கம்பி வழிபாதையில் உள்ளதால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. மேலும் மின்கம்பம் சிதிலமடைந்தும், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்