சென்னை ராமாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதன் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் பழுதடைந்துள்ளது. மின்வாரியம் கவனித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுகிறோம்.