கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்தில் இருந்து நத்தமேட்டுப்பாளையம் செல்லும் புகழூர் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலை வழியாக மின்கம்பம் நடப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு இந்த மின்கம்பத்தின் வழியாக மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் ஒரு மின்கம்பத்திற்கும் மற்றொரு மின்கம்பத்திற்கும் இடையில் உள்ள கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.