விருத்தாசலம் நகரம் 4-வது வார்டு நாச்சியார் பேட்டை, பெரியார் தெருவில் உள்ள மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். அதுபோல அனைத்து மின் கம்பங்களிலும், கம்பம் எண் சரியாக தெரியவில்லை. ஆகவே பழுதான மின் விளக்கை சரி செய்வதுடன், அனைத்து மின்கம்பத்திலும் கம்பம் எண் எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.