மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நால் வழி சாலையானது சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமானது. இந்த சாலையில் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சாலை அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் இந்தச் சாலையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவில் பயணிப் போருக்கு பல கஷ்டங்கள் உண்டாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நால் வழிச்சாலையில் தெரு விளக்குகளை அமைத்து தரும்படியாக வேண்டிக் கொள்கிறேன்.