கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நடையனூரில் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.