சென்னை பள்ளிக்கரனை, பாரதிதாசன் முதல் தெருவில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டபட்டது. மின்வாரிய அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் பழுதடைந்த தெருவிளக்கு சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.