மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே ௯௦-வது வார்டு வைத்தீஸ்வரன் தெருவில் மின்விளக்குகள் கடந்த சிலநாட்களாக எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலை எதிர்புறம் வரும் வாகனங்களை காண முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.