சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இண்டன்குளம் கிராமத்தில் இரவுநேரங்களில் அடிக்கடி மின்சார வினியோகம் தடைப்படுகிறது. இதனால் இந்தப்பகுதி பொதுமக்கள் இரவுநேரங்களில் தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் மின்தடை காலை வரை நீடித்ததால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர். எனவே அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.