திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாகுப்பம் மேடு எஸ்.பி.கண்டிகை பிளாக் பகுதியில் உள்ள மின்கம்பம் உடைந்து கீழே விழுந்துள்ளது. நீண்ட நாட்களாக இந்த மின் கம்பம் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தவும், புதிய மின்கம்பத்தை ஏற்படுத்தித் தரவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.