ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அ௫கே செவல்பட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் இருந்து உச்சிநத்தம், சாயல்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலையில் உள்ள கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இதனை கடக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே சாலையை கடந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.