அந்தியூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தை பெரிய அளவில் நடைபெறுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகளை விற்பதற்காக கொண்டு வருகிறார்கள். சந்தை கூடும் இடத்தில் மின்சார டிரான்பார்மர் உள்ளது. அதில் தெரியாமல் சிலர் மாடுகளை கட்டி வைத்துவிடுகிறார்கள். அதனால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் டிரான்பார்மரை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.