சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா சிறியூர் கிராமத்தில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.