ராமேசுவரம் பஸ் நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு வெளிச்சம் போதுமானதாக இல்லை. இதனால் பஸ் நிலையம் இருள்சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தில் கூடுதல் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.