மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2022-07-29 10:34 GMT

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வடக்குபொய்கைநல்லூர்,தெற்கு பொய்கைநல்லூர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலத்தில் பொதுமக்கள்,வாகனஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்கப்பார்களா?




மேலும் செய்திகள்