நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திடீரென்று அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் முழு நேர ஊதியம் பெறாமல் போய்விடுமோ என்று கூறுகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் மின்தடையை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையரசன், நாமகிரிப்பேட்டை, நாமக்கல்.