திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை சாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2-வது பிளாக் அருகே உள்ள தெரு விளக்கு கடந்த 9 மாதங்களாக எரியாமல் உள்ளது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியனது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் விதமாக மின் வாரிய அதிகாரிகளால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டுவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.