புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-07-28 11:59 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர் திசையன்விளை 2-வது வார்டு இட்டமொழி ரோடு காமராஜ் சிவகாமி தெருவில் மின்கம்பம் அடிபகுதி சேதம் அடைந்து உள்ளது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரிசெய்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்