ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-27 17:47 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரோடு பைகாரா 7-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. மழை காலம் என்பதால் பொதுமக்கள் மின்விபத்துகள் ஏற்படும் என்ற அச்சஉணர்வுடனே சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் மின்கம்பத்தின் அருகில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். எனவே  சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்