சென்னை ஜமீன் பல்லாவரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்புள்ளதால் மின் வாரிய அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.