அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையடி கிராமத்தில் நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில் தண்டவாளத்தின் வடக்கு பகுதியில் இடையன்விளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த சாலையோரத்தில் கம்பங்கள் அமைத்து மின்விளக்கு பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.