திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் பெரியபாளையம் கிரகபிரவேச நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருவதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக சேதமடைந்த மின்கம்பத்தை மின் வாரிய அதிகாரிகள் சரி செய்யவேண்டும்