நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. வேகமாக காற்று அடித்தால் கூட விழுந்துவிடும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமசாமி,பாலப்பட்டி,