திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், சேதம் அடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.