பவானி அந்தியூர் பிரிவு சாலையில் பவானி நகராட்சியின் பராமரிப்பின் கீழ் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கின் பயன்பாட்டுக்காக உள்ள ஒயர்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. யாராவது அங்கு செல்லும்போது தெரியாமல் பட்டுவிட்டால் கூட மின்சாரம் பாய்ந்துவிடும். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, பராமரிப்பின்றி உள்ள மின் ஒயர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.