ராமநத்தம் அருகே சித்தூரில் இருந்து கீழ்கல்பூண்டி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால் தற்போது சாலையை ஒட்டியப்படி மின்கம்பங்கள் உள்ளன. இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை ஒட்டி உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.